Paristamil Navigation Paristamil advert login

IPL 2024 யில் மும்பை இந்தியன்ஸின் கதை முடிந்தது! முன்னாள் வீரர் தடாலடி

IPL 2024 யில் மும்பை இந்தியன்ஸின் கதை முடிந்தது! முன்னாள் வீரர் தடாலடி

5 வைகாசி 2024 ஞாயிறு 10:28 | பார்வைகள் : 973


நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கதை முடிந்துவிட்டது என முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்து சுற்றுக்கான வாய்ப்பு மங்கிவிட்டது. 

இதனால் முன்னாள் வீரர்களான இர்பான் பதான், ஷேன் வாட்சன், கிரேம் ஸ்மித் ஆகியோர் அணி நிர்வாகத்தை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக, மும்பை இந்தியன்ஸின் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பதான் விளாசினார். 

அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ''ஐபிஎல் 2024யில் மும்பை இந்தியன்ஸின் கதை முடிந்தது. 

அவர்கள் காகிதத்தில் மிகச் சிறந்த அணியாக இருந்தனர், ஆனால் அவர்கள் சரியாக நிர்வகிக்கப்படவில்லை. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்த கேள்விகள் முற்றிலும் சரியானவை.

இன்று KKR 57/5 என்ற நிலையில் இருந்தபோது, நீங்கள் நமன் திரை 3 ஓவர்களை வீச வைத்தீர்கள். 

கொல்கத்தாவின் வெங்கடேஷ் ஐயர், மணீஷ் பாண்டேயின் முக்கியமான பார்ட்னர்ஷிப்பை 6வது பந்துவீச்சாளரை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் உருவாக்கி விட்டீர்கள்'' என தெரிவித்துள்ளார்.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்