இலங்கையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

5 வைகாசி 2024 ஞாயிறு 15:36 | பார்வைகள் : 5128
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நாளை முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இம்முறை 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களுமாக மொத்தமாக 452,979 பரீட்சார்த்திகள் நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இதேவேளை விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.