மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் பரிசுத் தொகை

19 ஆவணி 2023 சனி 09:22 | பார்வைகள் : 6690
அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இறுதி போட்டிகள் இடம்பெறவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
அதற்கு முன்பாக நாளை நடைபெற உள்ள 3வது இடத்திற்கான போட்டியில் ஸ்வீடன் - அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
மகளிர் உலகக்கோப்பை தொடர் மூலம் 4,700 கோடி (570 மில்லியன் டொலர்) வருவாய் ஈட்டியுள்ளதாக FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது கிடைத்துள்ள வருவாயானது கத்தார் ஆடவர் உலகக்கோப்பை பரிசுத்தொகையை (440 மில்லியன் டொலர்) விட அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய இன்ஃபான்டினோ, அடுத்த உலகக்கோப்பையில் அணிகளின் எண்ணிக்கையை 24யில் இருந்து 32 ஆக உயர்த்த உள்ளது.
பரிசுத்தொகையை உயர்த்த உள்ளதாகவும் உறுதி அளித்தார்.