கதைகளை தேடி செல்லும் சிம்பு!

5 வைகாசி 2024 ஞாயிறு 15:50 | பார்வைகள் : 5663
நடிகர் சிம்பு கடந்த ஆண்டில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவரது 48வது படத்தில் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது. இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக் லைப்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது அடுத்த படங்களுக்காக கதை கேட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சிம்பு. இப்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ' டைனோசர்ஸ்' என்கிற பட இயக்குனர் எம்.ஆர்.மாதவன் என்பவரை அழைத்து முதற்கட்டமாக தனது அடுத்த படத்திற்காக புதிய கதையை கேட்டுள்ளார் என நெருங்கிய வட்டாரத்தில் இருந்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025