Paristamil Navigation Paristamil advert login

விஜய்யின் கடைசி திரைப்படம் தொடர்பில் அதிரடி ...

விஜய்யின் கடைசி திரைப்படம் தொடர்பில் அதிரடி ...

6 வைகாசி 2024 திங்கள் 05:07 | பார்வைகள் : 6810


நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் சுமார் 80 சதவீதம் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய இறுதி திரைப்படத்தை எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் முடிவாகாமல் இருந்தது.

இருந்தபோதிலும் முதலில் ஹைதராபாத்தை சேர்ந்த டி.வி.வி நிறுவனம் அந்த படத்தை தயாரிப்பார்கள் என்று கூறப்பட்டது. அதற்குப் பிறகு மாஸ்டர் - லியோ திரைப்படங்களை தயாரித்த லலித் தயாரிக்க உள்ளார் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெங்களூருவை சேர்ந்த கே.வி.என் என்ற நிறுவனம் விஜயின் 69 ஆவது திரைப்படத்தை தயாரிப்பது உறுதியாகியுள்ளது.

இவர்கள் ஏற்கனவே சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்திற்கு பினான்ஸ் செய்திருந்தனர். இந்த நிலையில் தற்போது நேரடியாக விஜய் திரைப்படம் மூலமாக தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்