Paristamil Navigation Paristamil advert login

ஈபிள் கோபுரத்தை இந்த நேரத்தில் புகைப்படம் எடுப்பது குற்றம் - உங்களுக்குத் தெரியுமா?

 ஈபிள் கோபுரத்தை இந்த நேரத்தில் புகைப்படம் எடுப்பது குற்றம் - உங்களுக்குத் தெரியுமா?

6 வைகாசி 2024 திங்கள் 07:28 | பார்வைகள் : 1913


சுற்றுலாப்பயணிகளை அதிகம் ஈர்க்கும் சுற்றுலாத்தலங்களில் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரம். ஆனால், ஈபிள் கோபுரத்தை இரவு நேரங்களில் புகைப்படம் எடுப்பது சட்டத்தை மீறும் செயலாம்.

1985ஆம் ஆண்டு, ஈபிள் கோபுரத்தின் ஒளி அமைப்பை Pierre Bideau என்பவர் வடிவமைத்தார். அந்த ஒளி அமைப்பு ஒரு கலைப்படைப்பாக கருதப்படுகிறது. ஆக, ஐரோப்பிய பதிப்புரிமைச் சட்டப்படி 70 ஆண்டுகளுக்கு இரவு நேரத்தில் ஈபிள் கோபுரத்தை யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது.

Pierre 2021ஆம் ஆண்டு மரணமடைந்தார். பதிப்புரிமைச் சட்டப்படி, ஈபிள் கோபுரத்தில் அவர் உருவாக்கிய ஒளி அமைப்பு 70 ஆண்டுகளுக்கு அவரது பதிப்புரிமையின் கீழானது என்பதால் இரவு நேரத்தில் ஈபிள் கோபுரத்தை புகைப்படம் எடுப்பதைக் குறித்து இன்னும் பல ஆண்டுகளுக்கு யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. மீறுவோர், அபராதம் செலுத்த நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்