Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் மீண்டும் பரவும் கொரோனா...

பிரித்தானியாவில் மீண்டும்  பரவும் கொரோனா...

19 ஆவணி 2023 சனி 09:35 | பார்வைகள் : 5361


கொரோனாவைரஸின் மாறுபாடு உலகில் பரவ ஆரம்பித்துள்ளது.

அது பிரித்தானியாவிலும் 19.08.2023 இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த புதிய கொரோனாவைரஸ் மாறுபாடு BA.2.86 அல்லது ‘Pirola’ என அழைக்கப்படுகிறது.

இந்த வைரஸ் எந்த அளவுக்கு மோசமானது என்பது தெரியவில்லை.

இந்த பிரோலா வைரஸ் தனது புரத அமைப்பில் 30 மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.  

ஆகவே, அது மிக வேகமாக பரவக்கூடும் என்பதுடன், அது ஏற்கனவே கொடுக்கப்பட்ட தடுப்பூசியின் தாக்கத்தைக்கூட தாண்டி தொற்றை ஏற்படுத்திவிடக்கூடும் என்னும் விடயம் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் மிதமானது என்று கூறப்பட்டது.

அதுவும் ஏராளம் உயிர்களை பலிகொண்டுவிட்டது. ஆக, இந்த பிரோலா வைரஸ் எப்படி இருக்கும் என்பது குறித்து எதுவும் கூறுவதற்கில்லை.

இந்த பிரோலா வைரஸ் தொடர்பில் நான்கு முக்கிய அறிகுறிகளைக் கவனித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தும் மருத்துவர்கள், அந்த அறிகுறிகள் காணப்பட்டால், உடனே மருத்துவப்பரிசோதனை செய்துகொள்ள பரிந்துரைக்கிறார்கள்.

அதிக காய்ச்சல்,இருமல்,ஜலதோஷம்மற்றும் சுவை மற்றும் வாசனை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாறுபடுகள் அடைய அடைய, வைரஸ்கள் வலுவிழக்கும், அதாவது, உயிரைப் பறிக்கும் அவற்றின் திறன் குறையும். ஆனால், இந்த வைரஸ் எப்படிபட்டது என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்