Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தானில் உணவின்றி தவிக்கும் 1.55 கோடி மக்கள்!

ஆப்கானிஸ்தானில் உணவின்றி தவிக்கும் 1.55 கோடி மக்கள்!

19 ஆவணி 2023 சனி 09:38 | பார்வைகள் : 3319


ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அங்கு பொருளாதார சிக்கல் காரணமாக கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

அங்கு ஏழ்மை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.

இவ்வாறான நிலையில், ஆப்கானிஸ்தானில் 1.55 கோடி மக்கள் கடுமையான உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி மற்றும் 2 ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடி ஆகியவை மக்களின் தேவைகளை அதிகப்படுத்தியிருப்பதாக செஞ்சிலுவை சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் 27 லட்சம் மக்கள் நீண்ட கால உணவு பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலவும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பெரிய பொருளாதார திட்டங்களை அரசு தொடங்கியிருப்பதாக தலிபான் அரசின் பொருளாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் உணவு பற்றாக்குறையால் தவித்து வரும் ஆப்கானிஸ்தானிற்கு உதவும் விதமாக, ஐக்கிய நாடுகள் சர்வதேச உணவு திட்டத்துடன் இணைந்து இந்தியா கோதுமை வழங்குகிறது.

இந்தியா இதுவரை ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சர்வதேச உணவு திட்ட மையங்களுக்கு மொத்தம் 47,500 மெட்ரிக் டன் கோதுமை வழங்கியுள்ளது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்