அவதானம் 'JP Cloteau' நிறுவனத்தின் 'farine de blé noir bio' மாவில் நச்சுத்தன்மை. விவசாய அமைச்சு.
6 வைகாசி 2024 திங்கள் 14:56 | பார்வைகள் : 3646
பிரான்சில் மேற்குறிப்பிட்ட JP Cloteau' நிறுவனத்தின் 'farine de blé noir மாவினால் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட ஐந்து குழந்தைகள் உட்பட மொத்தம் 49 நபர்கள் நச்சுத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளனர் என விவசாய அமைச்சு தன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் மூவர் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் விவசாய அமைச்சகங்கள் புதன்கிழமை அனைத்து "JP Cloteau' நிறுவனத்தின் 'farine de blé noir மாவுகளையும் திரும்பப் பெறுமாறு கோரியுள்ளன, அதன் முடிவு திகதி அக்டோபர் 2024 மற்றும் மார்ச் 2025 உட்பட அனைத்து பொதிகளையும் விற்பனையில் இருந்து அகற்று மாறும் இரு அமைச்சுகளும் கூட்டு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாவினை கொள்வனவு செய்தவர்கள் மீண்டும் அதனை கொடுத்து உங்கள் பணத்தினை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சுகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த கோதுமை பயிற்செய்கையின் போது அதோடு சேர்ந்து முளைக்கின்ற நச்சுத்தன்மை உள்ள சில விதைகளும் இந்த மாவில் கலந்துள்ளமையினாலேயே இதற்கு நச்சுத்தன்மை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த மாவிலான உணவை ஏற்கனவே உட்கொண்டவர்கள் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நச்சுத்தன்மையானது நரம்பு மண்டலங்களை மிக வேகமாக பாதிக்கிறது எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
ம