குற்றப்பணத்தில் இருந்து தப்பிக்க இலக்கத்தகடை மறைத்து நூதன முயற்சி!

6 வைகாசி 2024 திங்கள் 21:00 | பார்வைகள் : 7634
தரிப்பிட கட்டணம் செலுத்தாத ஒருவர் குற்றப்பணத்தில் இருந்து தப்பிக்க, இலக்கத்தகடை மறைத்த நூதன சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் திகதியில் இருந்து தனது மோட்டார்சைக்கிளின் இலக்கத்தகடை துணியினால் சுற்றி கட்டிக்கொண்டு தரிப்பிடத்தில் நிறுத்தியுள்ளார். இறுதியாக அந்த மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டார்.
மூன்று பிள்ளைகளின் தந்தயான அவர், தரிப்பிட கட்டணத்தை செலுத்த முயாமல் இதுபோன்ற முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
வாகனத்தின் இலக்கத்தகடை மறைப்பது சட்டவிரோதமாகும். அவருக்கு €135 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025