Paristamil Navigation Paristamil advert login

யூத எதிர்ப்பு தாக்குதல்கள்! - முதல் காலாண்டில் 366 சம்பவங்கள் பதிவு!

யூத எதிர்ப்பு தாக்குதல்கள்! - முதல் காலாண்டில் 366 சம்பவங்கள் பதிவு!

7 வைகாசி 2024 செவ்வாய் 07:32 | பார்வைகள் : 2023


இவ்வருடத்தின் முதல் காலாண்டில் 366 யூத எதிர்ப்பு சம்பவங்கள் பதிவானதாக பிரதமர் கேப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார். 

முந்தைய 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 300% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் பரபரப்பான சூழல் காரணமாக பிரான்சில் யூதர்கள் மீதும், யூத அமைப்புகள், பள்ளிக்கூடங்கள் மீதும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. 

”யூத எதிர்ப்பு பிரான்சில் மேலோங்கியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. பிரெஞ்சு மக்கள் தொகையில் யூதர்கள் 1% சதவீதமே என்றாலும், பிரான்சில் பதிவாகும் மதவாத தாக்குதல்களில் 60% சதவீதமானவை அவர்கள் மீதே நிகழ்த்தப்படுகிறது” என கேப்ரியல் அத்தால் குறிப்பிட்டார். 

‘இந்த யூத தாக்குதல் அலையை எழுப்பிவிட்ட நாள் எது என்று அனைவருக்கும் தெரியும். அது ஒக்டோபர் 7’ எனவும் குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ளத்தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்