காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா?
7 வைகாசி 2024 செவ்வாய் 10:26 | பார்வைகள் : 1547
சின்னத்திரை நடிகர்கள் அர்ச்சனா மற்றும் அருண் இருவரும் காதலிக்கிறார்கள் என கிசுகிசுக்கப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் அர்ச்சனா அருணின் பதிவில் கமென்ட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
’ராஜா ராணி’ சீரியலில் வில்லியாக பிரபலமானவர் நடிகை அர்ச்சனா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் டைட்டில் வின்னர் ஆனார். வைல்ட் கார்டில் போட்டியாளராக நுழைந்து டைட்டில் வின்னர் என்ற வரலாற்றை முதல் முறையாக பிக் பாஸ் தமிழ் சீசனில் உருவாக்கினார் அர்ச்சனா.
இவருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் புகழ் நடிகர் அருணுக்கும் காதல் என்ற கிசுகிசு நீண்ட நாட்களாக சின்னத்திரையில் இருந்து வருகிறது.
அதற்கேற்றாற் போல, இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரே சமயத்தில் தனித்தனியாக கொடைக்கானலுக்கு ட்ரிப் போயிருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்கள். இந்த நிலையில்தான் அருண் போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.
அதை வீடியோவாக அவர் பகிர்ந்திருக்க, ‘என் ஹீரோவை ஷூட் செய்ததற்கு நன்றி’ என கமென்ட் செய்திருக்கிறார் அர்ச்சனா. இதைப் பார்த்த பலரும் ’இவர்கள் இருவரும் காதலிப்பது உண்மைதான்’ என்று கூறி வருகின்றனர்.
ஆனால், இருவரும் சேர்ந்து மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடிக்கிறார்கள் என்றும் அதை மறைமுகமாகக் குறிப்பிட்டுத்தான் அர்ச்சனா இப்படி கமென்ட் செய்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
நீண்ட நாட்களாக உலா வரும் தங்கள் காதல் கிசுகிசு குறித்து இருவரும் இதுவரையில் விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு விளம்பரம், மியூசிக் ஆல்பம், கடை திறப்பு என பிஸியாக இருக்கிறார் அர்ச்சனா. அருண் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு அடுத்து தன்னுடைய அடுத்த புராஜெக்ட் பற்றி இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்.