யாழில் கோர விபத்து - கணவன் ஸ்தலத்திலேயே பலி - மனைவி படுகாயம்
19 ஆவணி 2023 சனி 10:06 | பார்வைகள் : 10374
யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் செம்மணி வளைவுக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கணவர் உயிரிழந்ததோடு, மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளும் பொலிஸாரின் தண்ணீர் பௌசரும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் புவனேஸ்வரன் மனோஜ் என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்தவர் ஆவார்.
மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan