Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் கொடூரம்... பிறந்த குழந்தைகளை கொலை செய்த செவிலியர்

பிரித்தானியாவில் கொடூரம்...  பிறந்த குழந்தைகளை கொலை செய்த  செவிலியர்

19 ஆவணி 2023 சனி 10:20 | பார்வைகள் : 4808


பிரித்தானியாவில் உள்ள செஸ்டர் மருத்துவமனையில் 2015 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளின் பிரிவில் செவிலியராக லூசி லெட்பி (Lucy Letby) என்ற பெண் பணியாற்றியுள்ளார்.

அதன் போது, 8 குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

2018ல் லூசி லெட்பி-ஐ பொலிஸார் கைது செய்தனர்.

காலகட்டத்தில் மருத்துவமனையில் பிறந்த 5 பெண் குழந்தைகள் மற்றும் 5 ஆண் குழந்தைகள் என 10 குழந்தைகளை அவர் கொல்ல முயற்சித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் அவரது வீட்டை சோதனையிட்ட போது மருத்துவமனை சம்பந்தமான கையால் எழுதப்பட்ட ஆவணங்களில், “நான் கெட்டவள், இந்த கொலையை நான் தான் செய்தேன்” என்று லூசி லெட்பி கையால் எழுத ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் லூசி 18க்கும் மேற்பட்ட முறை தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஏற்க மறுத்துள்ளார்.

இந்நிலையில் பல கட்ட நீதிமன்ற விசாரணைக்கு பிறகு, லூசி லெட்பி கடந்த 2015 முதல் 2016ம் காலக்கட்டத்தில் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு செவிலியராக பணியாற்றிய போது 7 குழந்தைகளை கொன்றது மற்றும் 6 குழந்தைகளை கொல்ல முயற்சித்தது ஆகியவற்றிகாக குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

தீர்ப்பில் ஒரே குழந்தையை இரண்டு முறை கொலை செய்ய முயற்சித்தது உட்பட 7 கொலை முயற்சிகளில் லூசி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் லூசி மீது உள்ள 6 கொலை முயற்சி வழக்குகள் குறித்த தீர்ப்பை ஜூரிகளால் வழங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்