இஸ்ரேலில் போதைப்பொருள் கடத்தல் - தலைவர்கள் கைது

8 வைகாசி 2024 புதன் 08:42 | பார்வைகள் : 6719
இஸ்ரேல் நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக கடத்தல் கும்பல் தலைவர்கள் 26 கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கடலையொட்டிய வடக்கு கரையோரத்தில் உள்ள இலாத் நகரில், போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு அதிரடி நடவடிக்கையாக 26 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் என தெரிய வந்தது. பொலிஸார் சிலர் சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளுடன் ஒன்றாக செயல்பட்டு அடையாளம் காட்டியதன் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸார் கூறுகையில், ''கடந்த 10 மாதங்களாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆபத்திற்குரிய போதைப்பொருட்களை கடத்தி விநியோகம் செய்பவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுடன், பல இடங்களில் எங்கள் ஆட்கள் பணியில் ஈடுபட்டனர்.
இதில் கொக்கைன், கெட்டமைன் மற்றும் டோசா உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத போதைப்பொருட்கள் வெவ்வேறு அளவுகளில், வெவ்வேறு வகைகளில் வாங்கப்பட்டன'' என தெரிவித்துள்ளனர்.
மேலும், ''நீண்டகால மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடவடிக்கைகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டம் தொடரும்'' என்று இலாத் பகுதியின் மண்டல தளபதி கூறியுள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1