Seine-et-Marne : பெண்ணை மோதித்தள்ளிய மகிழுந்து!

8 வைகாசி 2024 புதன் 10:14 | பார்வைகள் : 12544
பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட 25 வயதுடைய பெண் ஒருவரை மகிழுந்து ஒன்று மோதித்தள்ளியுள்ளது.
திங்கட்கிழமை மாலை இச்சம்பவம் Pomponne (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. rue du Général-Leclerc வீதியில் உள்ள பாதசாரிகள் கடவையினை கடக்க முற்பட்ட 25 வயதுடைய பெண் ஒருவரை அதிவேகமாக வந்த மகிழுந்து ஒன்று மோதித்தள்ளியது. இதில் அப்பெண் 15 மீற்றர் தூரம் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். பல்வேறு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், தலையில் காயமும் ஏற்பட்டுள்ளது.
மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. Dampmart (Seine-et-Marne) நகரைச் சேர்ந்த குறித்த சாரதி விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025