உக்ரைன் ரஷ்ய இடையிலான போர்... இராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை
19 ஆவணி 2023 சனி 10:32 | பார்வைகள் : 4978
உக்ரைன் ரஷ்யா நாடுகளுக்கிடையிலான போரில் சுமார் அரை மில்லியன் இராணுவ வீரர்களை இரண்டு நாடுகளும் இழந்து இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் மதிப்பீட்டுள்ளனர்
இதில் ரஷ்ய தரப்பில் மட்டும் 3,00,000 வீரர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் 1,20,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
1,80,000 ரஷ்ய வீரர்கள் படுகாயம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி தி நியூயார்க் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடைபெறும் களத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்கள், பொது இறுதிச்சடங்குகள், பேச்சுவார்த்தையின் இடைமறிப்புகள் மற்றும் உக்ரைன் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் இந்த தரவானது எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய தரப்பை பொறுத்தவரை 70,000 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதுடன், 1,20,000 பேர் படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரில் இராணுவ வீரர்களின் இழப்பு உக்ரைனுக்கு குறைவாக காணப்பட்டாலும், ரஷ்ய ராணுவத்தின் அளவு உக்ரைனிய விட 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் போர் பிரிவு வீரர்கள், இருப்பு ராணுவ வீரர்கள் மற்றும் துணை ராணுவ வீரர்கள் என மொத்தம் 5 லட்சம் வீரர்கள் உள்ளனர்.
ஆனால் பல தரப்பட்ட கூலிப்படைகளை சேர்த்து ரஷ்யாவின் மொத்த வீரர்களின் எண்ணிக்கை மொத்தம் 1.3 மில்லியன் ஆகும்.
பக்முட் இழப்புகளின் எண்ணிக்கை இன்னும் உச்சத்தில் இருப்பதாகவும், தினமும் இரண்டு தரப்புகளும் 100 வீரர்கள் வரை இழப்பதாக அமெரிக்க தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.