Paristamil Navigation Paristamil advert login

உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை!

உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை!

8 வைகாசி 2024 புதன் 12:49 | பார்வைகள் : 4591


உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை 3ஆவது இடம் பிடித்துள்ளது. 

 
உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரியாக உறங்கும் அளவினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்கமைய இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இதற்கமைய இலங்கை வாழ் மக்கள் 8.1 மணிநேரம் உறங்குவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த ஆய்வின்படி 12 மணி நேரத்துடன் பல்கேரியா 1ஆவது இடத்திலும் 10.2 மணிநேரத்துடன் அகோலா 2ஆவது இடத்திலும் காணப்படுகின்றன. 
 
இதேவேளை எமது அண்டை நாடான இந்தியா 42ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்