இஸ்ரேலுக்கான வெடிகுண்டு ஏற்றுமதியை இடைநிறுத்திய அமெரிக்கா- தவிக்கும் ரஃபா மக்கள்
8 வைகாசி 2024 புதன் 13:40 | பார்வைகள் : 2336
இஸ்ரேலின் தீவிரமான தரைப்படைத் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கான வெடிகுண்டு ஏற்றுமதியை அமெரிக்கா இடை நிறுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனின் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போர் ஆனது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விடாமல் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலிய படைகள் தற்போது காஸாவின் மூலோபாய நகரான ரஃபா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலின் தீவிரமான குண்டு வீச்சு தாக்குதல் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்து இருப்பதாக உள்ளூர் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
போர் தொடங்கியதில் இருந்து ரஃபா நகரம் மனிதாபிமான பொருட்களை எடுத்து செல்லும் முக்கிய வழித்தடமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஃபா நகரம் மீது இஸ்ரேலின் தீவிரமான தரை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கான வெடிகுண்டு ஏற்றுமதியை அமெரிக்கா இடைநிறுத்தி உள்ளது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
CBS செய்தி நிறுவனத்திடம் அவர் வழங்கிய தகவலில், கப்பலில் 1,800 2,000lb (907kg) குண்டுகள் மற்றும் 1,700 500lb வெடிகுண்டுகள் இருந்தன என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இஸ்ரேல் ரஃபா மக்களின் மனிதாபிமான தேவைகளை முழுமையாக தீர்க்கவில்லை என்றும் கூறினார்.