2025 ஆம் ஆண்டில் சென் நதியில் குளிப்பது இலவமாக்கப்படும்!

8 வைகாசி 2024 புதன் 13:56 | பார்வைகள் : 9456
சென் நதியில் குளிப்பது தொடர்பான விவாதங்கள் பெருளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டில் இருந்து அது இலவசமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசில் இந்த ஒலிம்பிம் போட்டிகளுடன் சென் நதியில் மூன்று நீச்சல் தடாகங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்குரிய பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நீச்சல் தடாகங்களை நிரந்தரமாக்கவும், அதில் ஆண்டுதோன்றும் கோடை காலங்களில் குளிக்க அனுமதிப்பது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நீச்சல் தடாகங்களில் குளிப்பதற்கு கட்டணம் அறவிடப்படாமல் முற்றுமுழுதாக இலவசமாக்கப்பட உள்ளமை தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இம்மாதம் இடம்பெற உள்ள நகரசபைக் கூட்டத்தில் இது தொடர்பாக வாக்கெடுக்கப்பட உள்ளது.
■ 12 ஆம் வட்டாரத்தின் Bercy அருகேயும்,
■ 4 ஆம் வட்டாரத்தில் Marie arm அருகேயும்,
■ 15 ஆம் வட்டாரத்தில் Grenelle arm அருகேயும் இந்த நீச்சல் தடாகங்கள் அமைக்கப்பட உள்ளன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025