இளைஞனைக் கடத்தி €33,000 யூரோக்கள் பணம் கேட்ட கும்பல்! - ஒருவர் கைது!!
8 வைகாசி 2024 புதன் 20:00 | பார்வைகள் : 3705
பரிசைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க கடத்தல்காரர்களை €33,000 யூரோக்கள் பணம் கோரியுள்ளனர்.
16 ஆம் வட்டாரத்தின் Avenue Bugeaud வீதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் வைத்து குறித்த இளைஞன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கடத்தப்பட்டுள்ளார். மதுபான விடுதிக்குள் நுழைந்த கடத்தல்காரர்கள் இருவர், குறித்த இளைஞனை நோட்டம் விட்டு, பின் தொடர்ந்து சென்று, பின்னர் அவரை மடக்கிப் பிடித்து மகிழுந்துக்குள் ஏற்றி கடத்திச் சென்றனர்.
பின்னர் அவரை விடுவிக்க கடத்தல்காரர்கள் €33,000 யூரோக்கள் பண கோரியுள்ளனர். ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை.
குறித்த இளைஞன் மதுபான விடுதிக்கு அருகே வைத்து Fiat 500 ரக மகிழுந்தில் கடத்தப்பட்டதையும், பின்னர் குறித்த மகிழுந்து பயணித்த வீதிகளையும் கண்டறித்து அவரை நெருங்கியுள்ளனர்.
அதற்குள்ளாக இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு குறித்த இளைஞன் Asnières-sur-Seine (Hauts-de-Seine) நகரில் மகிழுந்து ஒன்றுக்குள் இருந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.
கடத்தல்காரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாமவர் தேடப்பட்டு வருகின்றார்.
பரிஸ் 19 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.