Porte de Bagnolet : வீதி விபத்தில் இரு காவல்துறையினர் காயம்!
.jpeg)
9 வைகாசி 2024 வியாழன் 10:46 | பார்வைகள் : 8980
நேற்று புதன்கிழமை சுற்றுவட்ட வீதியில் (périphérique) இடம்பெற்ற விபத்தில் இது காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களில் கண்காணிப்பில் ஈடுபடும் Brav-M படையைச் சேர்ந்த இரு வீரர்களே காயமடைந்துள்ளனர். Porte de Bagnolet அருகே, நண்பகல் வேளையில், மகிழுந்து ஒன்றை சோதனையிடுவதற்காக இரு மோடார் சைக்கிள்களில் இரு வீரர்கள் பயணித்த நிலையில், பின்னால் வந்த மற்றொரு மகிழுந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதியுள்ளது.
இச்சம்பவத்தில் அதில் பயணித்த இது வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருள் எதையும் உட்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025