ஐரோப்பிய தினம் - நீல நிறத்தில் ஒளிரவிடப்படும் Arc de Triomphe..!!

9 வைகாசி 2024 வியாழன் 15:00 | பார்வைகள் : 6892
இன்று மே 9, வியாழக்கிழமை ’ஐரோப்பிய தினம்’ (Journée de l’Europe) கொண்டாப்படுகிறது. அதை பெருமைப்படுத்தும் விதமாக l’Arc de Triomphe வளைவு நீல நிறத்தில் ஒளிரவிடப்பட உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பல்வேறு நாடுகள் தங்களது பிரசித்தி பெற்ற தலங்களில் இதே நீல நிற மின்விளக்குகளை ஒளிரவிட உள்ளன.
பரிசில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த நீல நிற ஒளி l’Arc de Triomphe இல் ஒளிரவிடப்பட உள்ளது. ஐரோப்பாவின் அடையாளமான கரு நீல நிறத்தில் இந்த மின் விளக்குகள் ஒளிரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள 440 மில்லியன் ஐரோப்பியர்கள் பெருமைகொள்ளும் விதமாக தங்களது அடையாளங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அதேவேளை, ஐரோப்பிய தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.