சவுதியின் மெகாசிட்டி திட்டம்... நிலம் கைமாறாத குடிமக்களை கொல்ல உத்தரவு
9 வைகாசி 2024 வியாழன் 12:18 | பார்வைகள் : 3300
சவுதி அரேபியாவில் 500 பில்லியன் டொலர் திட்டத்தின் ஒருபகுதியாக உருவாகவிருக்கும் மெகாசிட்டி திட்டத்திற்கு எதிராக நிலம் அளிக்க மறுக்கும் குடிமக்களை கொல்லவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
சவுதி அரேபியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் 500 பில்லியன் டொலர் திட்டத்தின் ஒருபகுதியாக Line city என்ற பெயரில் சிறப்பு நகரமொன்றை உருவாக்க உள்ளனர்.
தற்போது இந்த திட்டம் தொடர்பிலேயே அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
குறித்த திட்டத்திற்கு எதிராக, நிலம் கைமாற மறுக்கும் குடிமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அல்லது கொல்லவும் அதிகாரம் அளிக்கப்பட்டதாக அம்பலப்படுதித்தியுள்ளார்.
தொடர்புடைய திட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் குடியிருக்கும் பூர்வக்குடி மக்களையே சவுதி அரசாங்கம் குறிவைத்துள்ளது. அப்பகுதிகளில் குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கையின் போது, ஆர்ப்பாட்டத்தின் இடையே ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
Line திட்டமூடாக ஆண்டுக்கு 48 பில்லியன் டொலர் அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தில் அதிகரிக்க முடியும் என சவுதி அரேபியா நம்புகிறது. Neom மலைப்பகுதியில் இருந்து செங்கடல் வரையில் 170 கி.மீ தொலைவுக்கு இந்த திட்டம் முதலில் வடிவமைக்கப்பட்டது.
தற்போது 10 மைல்கள் என்பதை வெறும் 1.5 மைல்கள் என குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சவுதி அரேபியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட உளவுத்துறை அதிகாரி ஒருவரே, Line திட்டம் தொடர்பாக பூர்வக்குடி மக்களை கொல்லவும் தயங்காத சவுதி பட்டத்து இளவரசர் குறித்து வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
கிராம மக்களில் 47 பேர்கள் வீட்டைவிட்டு வெளியேற மறுத்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலர் மீதும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 40 பேர்கள் தற்போதும் காவலில் உள்ளனர், இதில் ஐவர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளனர்.
ஆனால், பூர்வக்குடி நபர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடந்த காரணத்தாலையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக சவுதி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.