Paristamil Navigation Paristamil advert login

விஜய்சேதுபதி போல மாறும் சிவகார்த்திகேயன்...?

விஜய்சேதுபதி போல மாறும் சிவகார்த்திகேயன்...?

9 வைகாசி 2024 வியாழன் 15:02 | பார்வைகள் : 6718


நடிகர் கவின் நடித்திருக்கும் ‘ஸ்டார்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோவில் நடித்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இப்படி அடுத்தடுத்து கேமியோவில் நடித்தால் அவரது கரியர் விஜய்சேதுபதி போல ஆகிவிடுமோ என அவரது ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

’பியார் பிரேமா காதல்’ படப்புகழ் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’. நாளை வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு நடிகர் விஜயின் ’தி கோட்’ படத்திலும் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக செய்திகள் வைரலானது.

இப்படி கெஸ்ட் ரோலில் நடித்துக் கொண்டிருந்தால் சிவகார்த்திகேயன் கரியரும் விஜய்சேதுபதி போல காலியாகி விடுமா என அவரது ரசிகர்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏனெனில், சினிமாவில் தனது கரியர் தொடங்கும்போது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்தார் விஜய்சேதுபதி.

பின்பு நடிகராக உச்சம் தொட்டதும் பல படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதுவே, அவரது மார்க்கெட் சரிவடைய காரணமாக அமைந்தது. இப்போது விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்களின் முதல் நாள் ஓப்பனிங்கே தடுமாறி வருகிறது.

கடந்த 2022-ல் ‘விடுதலை’ படத்திற்குப் பிறகு அவருடைய படங்கள் எதுவும் பெரிதாக சோபிக்கவில்லை. ‘ஜவான்’ படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார். தற்போது தமிழில் அவரிடம் ‘விடுதலை2’, ‘மகாராஜா’ தவிர பெரிதாக வேறு எந்தப் படங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைப் போலவே, இப்போது சிவகார்த்திகேயனும் தொடர்ச்சியாக கெஸ்ட் ரோலில் நடித்து வருவதால் அவரது கரியரும் காலியாகிவிடுமா என அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்