ஈரானில் சிறைவைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு நபர் விடுதலை..! - ஜனாதிபதி மக்ரோன் அறிவிப்பு!

13 ஆனி 2024 வியாழன் 08:51 | பார்வைகள் : 9184
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஈரானில் சிறைவைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு நபர் லூயி அர்னோ (Louis Arnaud) விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
ஈரானில் தன்னார்வ தொண்டு பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு பிரெஞ்சு நபர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அங்கு சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்களில் லூயி அர்னோ மட்டும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஜூன் 12 ஆம் திகதி ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஏனையவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் இன்று ஜூன் 13 ஆம் திகதி வியாழக்கிழமை நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.