பனிப்புயலின் தாக்கம் - 70 லட்சம் கால்நடைகளை இழந்த மங்கோலியா
13 ஆனி 2024 வியாழன் 09:48 | பார்வைகள் : 2925
பனிப்புயலுக்கு 70 லட்சம் கால்நடைகளை மங்கோலியா இழந்துள்ளது.
ரஷ்யாவுக்கும், சீனா மற்றும் தீபெத்துக்கு இடையில் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் மங்கோலியா அமைந்துள்ளது.
இதனால் வருடத்திற்கு 10 மாதங்கள் மங்கோலியாவில் மைனஸ் 30 டிகிரி செல்சியல் அளவில் குளிர்ந்த வானிலையே நிலவும். இந்தநிலையில் மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருகிறது.
இதன் காரணமாக மங்கோலியா நாடு முழுவதும் பனியால் உறைந்து உள்ளதுடன் விளைநிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவை பனிப்புயலுக்கு சேதமடைந்தன.
இதனால் அங்கு உணவு பொருட்கள் உற்பத்தி செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் உணவு பொருள் தட்டுப்பாட்டால் மங்கோலியாவில் 70 லட்சம் கால்நடைகள் பலியாகி உள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.