Paristamil Navigation Paristamil advert login

ICC-யின் புதிய விதிகள்- USA அணிக்கு 5 ஓட்டங்கள் பெனால்டி வழங்கப்பட்டது ஏன்?

ICC-யின் புதிய விதிகள்- USA அணிக்கு 5 ஓட்டங்கள் பெனால்டி வழங்கப்பட்டது ஏன்?

13 ஆனி 2024 வியாழன் 09:57 | பார்வைகள் : 4215


டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில், அமெரிக்க அணிக்கு ஐசிசி விதித்த 5 ஓட்டங்கள் பெனால்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2024 டி20 உலகக் கோப்பையின் நேற்றைய லீக் சுற்று போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின.

 இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் சூப்பர் 8 சுற்றுக்கும் 3வது அணியாக முன்னேறியுள்ளது.

நியூயார்க் மைதானத்தில் ஓட்டங்கள் எடுப்பது மிகவும் கடினமாக இருந்து வருகிறது.

இதனால், அமெரிக்க அணி 20 ஓவர்களில் 110 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


அதேபோல், இந்திய அணியும் ஓட்டங்கள் சேர்ப்பதில் மிகவும் தடுமாறியது, ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தனர்.

அதன் பின்னர், சிவம் துபே மற்றும் சூரியகுமார் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்ததோடு வெற்றியையும் உறுதி செய்தனர்.

இந்த நிலையில், இந்த போட்டியின் போது அமெரிக்க அணி கேப்டன், ஓவர்களுக்கு இடையே குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், ஐசிசி-யின் புதிய விதிப்படி அணிக்கு 5 ஓட்டங்கள் பெனால்டியாக விதிக்கப்பட்டது.

போட்டிகளை விரைவாக நடத்தும் நோக்கில், ஐசிசி ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஒரு அணி, அடுத்த ஓவருக்கு தயாராக 1 நிமிடத்திற்கு மேல் இரண்டு முறை தாமதம் செய்தால், அணிக்கு 5 ரன்கள் பெனால்டி விதிக்கப்படும்.

அமெரிக்க அணி, மூன்றாவது முறையாக தாமதம் செய்ததால், அவர்களுக்கு பெனால்டி வழங்கப்பட்டது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்