Paristamil Navigation Paristamil advert login

ஆரம்பமாகவுள்ள ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட தொடர்

ஆரம்பமாகவுள்ள ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட தொடர்

13 ஆனி 2024 வியாழன் 10:22 | பார்வைகள் : 704


ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் 17 வது தொடர் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரானது இந்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெறவுள்ளது.

இதில் 24 அணிகள் ஐரோப்பாவின் கிண்ணத்திற்காக போட்டியவுள்ளன. கடைசிப் தொடரில் இங்கிலாந்தை பெனால்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இத்தாலி இறுதியாக வெற்றிபெற்றது.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020 தொடர் 2021க்கு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் 2024 ஆம் ஆண்டுக்கான 17ஆவது தொடர் வழக்கமான நான்கு ஆண்டு சுழற்சி முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜூன் 14 ஆம் திகதி முனிச் கால்பந்து அரங்கில் ஜெர்மனி ஸ்காட்லாந்து ஆட்டத்துடன் தொடர் ஆரம்பமாகிறது.

குழு நிலை போட்டிகள் ஜூன் 26 ஆம் திகதி வரையும் நடைபெற்று நாக் அவுட் சுற்றுக்கள் ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதன் இறுதிப் போட்டி ஜூலை 14 ஆம் திகதி பெர்லினில் உள்ள ஒலிம்பியாஸ்டேடியனில் நடைபெறவுள்ளது.

ஜெர்மனி 1990ற்கு பிறகு போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். 

2018 இல் சுவிட்சர்லாந்தின் நியோனில் நடந்த UEFA செயற்குழு கூட்டத்தில் போட்டியை நடத்தும் நாடாக ஜெர்மனி தேர்ந்தெடுக்கப்பட்டது.

போட்டியை நடத்த ஏலம் எடுத்த ஒரே நாடு துருக்கி மட்டுமே. போட்டிக்காக பத்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

இருபத்து நான்கு அணிகள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டியில் பங்கேற்கும். மொத்தம் 51 போட்டிகள் நடைபெறும்.

A: ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து

B: ஸ்பெயின், குரோஷியா, இத்தாலி, அல்பேனியா

C: ஸ்லோவேனியா, டென்மார்க், செர்பியா, இங்கிலாந்து

D: போலந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ்

E: பெல்ஜியம், ஸ்லோவாக்கியா, ருமேனியா, உக்ரைன்

F: துருக்கி, ஜார்ஜியா, போர்த்துகல், செக் குடியரசு.

இதன்படி பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் புள்ளிப்பிட்டியலில், முன்னணியில் உள்ளன. தகுதிச் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் போர்த்துகல் மட்டுமே வென்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்