Paristamil Navigation Paristamil advert login

மாற்று பாலினத்தினர் மீது தாக்குதலில் ஈடுபட்ட தீவிர வலதுசாரி ஆர்வலர்கள்.. - பிரதமர் கண்டனம்.!!

மாற்று பாலினத்தினர் மீது தாக்குதலில் ஈடுபட்ட தீவிர வலதுசாரி ஆர்வலர்கள்.. - பிரதமர் கண்டனம்.!!

13 ஆனி 2024 வியாழன் 15:09 | பார்வைகள் : 7469


ஐரோப்பிய தேர்தலில் வெற்றி பெற்ற  Rassemblement national கட்சியைச் சேர்ந்த நான்கு ஆர்வலர்கள் மாற்று பாலினத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் கேப்ரியல் அத்தால் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி பரிசில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது. ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது மூவர் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் Rassemblement national கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடிக்கொண்டிருக்கும் போது வீதியில் நடந்து சென்ற அவர்களை தாக்கியுள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

'எங்களது சுதந்திரத்துக்கான கெடுதல் இது. பிரான்சின் சகோதரத்துவம் கேள்விக்குறியாகியுள்ளது.!' என கேப்ரியல் அத்தால் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்