Paristamil Navigation Paristamil advert login

மிக மோசமான 'நம்பிக்கையின்மையை' சந்தித்துள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்.!!

மிக மோசமான 'நம்பிக்கையின்மையை' சந்தித்துள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்.!!

13 ஆனி 2024 வியாழன் 17:33 | பார்வைகள் : 3281


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மிக மோசமான 'நம்பிக்கையின்மையை' பிரெஞ்சு மக்களிடம் சம்பாதித்துள்ளார். 

24% சதவீதமான பிரெஞ்சு மக்கள் மட்டும் இம்மானுவல் மக்ரோனை நம்புவதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதமானது 2022 ஆம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்தெடுத்ததன் பின்னர் அவர் சந்தித்துள்ள மிகக்குறைந்த நம்பிக்கையின்மை இதுவாகும்.

2018 ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர் 23% சதவீதமான நம்பிக்கையின்மையை அவர் சந்தித்திருந்தார். 

பிரான்சில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம் மக்ரோனின் அரசாங்கத்துக்கு எழுந்துள்ளது. இந்நிலையில் Elabe நிறுவனம் மேற்கொண்டிருந்த இந்த கருத்துக்கணிப்பு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்