பாலஸ்தீன மருத்துவ ஊழியர்களுக்கு பிரான்ஸ் உதவித்தொகை..!
14 ஆனி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 3303
யுத்தத்துக்கு முகம் கொடுத்துள்ள பாலஸ்தீனம், தன் மருதுவ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க போதிய நிதி இல்லாமல் தத்தளித்து வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் முதற்கட்டமாக எட்டு மில்லியன் யூரோக்கள் பணத்தினை பாலஸ்தீனத்துக்கு வழங்கியுள்ளது.
பாலஸ்தீனத்தின் அதிகாரிகளிடன் இந்த தொகை கையளிக்கப்பட்டுள்ளதாக நேற்று ஜூன் 13 ஆம் திகதி பிரான்ஸ் அறிவித்துள்ளது. "அனைத்து பாலஸ்தீனியர்களும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஆதரவு பாலஸ்தீனிய அதிகாரசபையின், குறிப்பாக சுகாதார அமைச்சகத்தின் சம்பளம் வழங்குவதற்கு பங்களிக்கும்" என பிரெஞ்சு ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இவ்வாண்டில் மேலும் 16 மில்லியன் யூரோக்கள் நிதியினை பாலஸ்தீனத்துக்கு வழங்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.