எதிர்வரும் யூலை மாதத்தில் இருந்து அடிப்படை சம்பளம் 1600€ யூரோக்கள், அரசின் விலைவரி கணிசமாக குறைக்கப்படும்.
14 ஆனி 2024 வெள்ளி 07:54 | பார்வைகள் : 8029
பிரான்சில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நாளில் இருந்து தீவிர வலதுசாரிகள் கட்சிகள், இடதுசாரிகள் கட்சிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து தேர்தலைச் சந்திக்கும் முனைப்பில் ஈடுபட்டு வரும் அதேவேளை வாக்காளர்களை தம் பக்கம் கவர்ந்து கொள்ளவும், இன்றைய அரசின் நிலை தவறானது என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கவும் ஆரம்பித்துள்ளன. இதனையே தங்களின் தேர்தல் அறிக்கையாக மக்களிடம் கையளிக்கவும் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் பிரான்சில் இன்று அடிப்படை சம்பளமாக ஆண்டொன்றுக்கு இருக்கும் 16784 Eur 28 Centவும் அதாவது மாதம் ஒன்றுக்கு அடிப்படை இருக்கும் 1398 EUR 69 Cent சம்பளத்தை 201Eur 72 Cent உயர்த்தி வளங்குவோம் என இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த இன்றைய பிரான்ஸ் அரசின் நிதி அமைச்சர் Bruno le Maire "அடிப்படை சம்பளம் Net 1600 EUR வழங்குவோம் என கூறும் இடதுசாரிகளின் அறிவிப்பு அடிப்படை நிதி சார்ந்த விளக்கமின்மையை காட்டுகிறது. பிரான்ஸ்சின் இன்றைய நிதி நிலமை எழுந்தமானமாக அடிப்படை சம்பளத்தில் 201Eurகளை அதிகரிக்கும் நிலையில் இல்லை" என தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் Bruno le Maire "தீவிர வலதுசாரிகள் மக்களுக்கு கூறுகின்ற எரிபொருள் மீதான வரி குறைப்பு, மின்சார கட்டணம் மீதான வரி குறைப்பு ,உணவுப் பொருட்கள் மீதான வரி குறைப்பு போன்றவையும் இன்றைய பிரான்சின் நிதி நிலைமையில் சாத்தியக் கூறற்ர அறிவித்தல்" எனவும் தெரிவித்துள்ளார்