அவுஸ்திரேலியாவில் மாணவர் விசா விதிமுறைகளில் திடீர் மாற்றம்

14 ஆனி 2024 வெள்ளி 08:42 | பார்வைகள் : 8121
அவுஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் காலவரையின்றி தங்குவதைத் தடுக்க அந்நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் இனி அவுஸ்திரேலியாவில் தங்கி மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது.
இந்த விதிமுறைகள் அடுத்த மாதம் (ஜூலை 1) முதல் அமுலுக்கு வருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பவர்களுக்கு மட்டுமே விசா வழங்க அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் Temporary Graduate visa, Visitor visa, Electronic Travel Authority visa, Medical Treatment visa, eVisitor visa, Transit visa, Diplomatic Temporary visa, Temporary Work visa (International Relations), Domestic Worker (Temporary) visa போன்ற தற்காலிக விசாக்களை வைத்திருப்பவர்கள் மாணவர் வீசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது.
இதனால் ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அவுஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் பார்வையாளர் விசா விண்ணப்பதாரர்கள் நாட்டிற்கு வெளியே இருந்து விண்ணப்பிக்க வேண்டும்.
தற்காலிக விசாவில் சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் காலவரையின்றி தங்குவதை தடுக்கும் வகையில் அந்நாடு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி அறிவிக்கப்பட்ட புதிய இடம்பெயர்வு உத்தியின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1