Paristamil Navigation Paristamil advert login

போதைப்பொருளுக்கு அடிமையான இரண்டு வயது குழந்தை.. - தாயிற்கு ஆறுமாத சிறை..!

போதைப்பொருளுக்கு அடிமையான இரண்டு வயது குழந்தை.. - தாயிற்கு ஆறுமாத சிறை..!

14 ஆனி 2024 வெள்ளி 08:55 | பார்வைகள் : 8249


இரண்டு வயது குழந்தை ஒன்று போதைப்பொருளுக்கு அடிமையாடியுள்ளது. அக்குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Lyon மாவட்டத்தில் உள்ள Bron எனும் சிறு கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஜூன் 17 ஆம் திகதி, இரண்டு வயதுடைய சிறுமி ஒருவர் உடல்நலம் குன்றி, Femme Mère Enfant மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் கொக்கைன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது. 

அதையடுத்து, அவரது தாயார் கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருளுக்கு அடிமையாவனவர் எனவும், தாதியாக பணிபுரிந்து வந்த அவர், பணியில் இருந்து இடை நிறுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவருக்கு தற்போது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்