Paristamil Navigation Paristamil advert login

நீயாக கொடுக்கும் முதல் முத்தம்

நீயாக கொடுக்கும் முதல் முத்தம்

14 ஆனி 2024 வெள்ளி 10:19 | பார்வைகள் : 403


உயிரே...


அலைகள் விடாமல் வந்து செல்லும்
இந்த கடற்கரை ஓரம்...

தொலைவில் கைகோர்த்து
வரும் காதல் ஜோடியும்...

கரையை தொட்டு தொட்டு பறந்து
கொண்டு இருக்கும் புறாவும்...

காணும் போதெல்லாம் நெஞ்சில்
துடிக்கும் உன் நினைவுகள்...

தூங்கும் என் விழிகளை
தட்டி எழுப்புகிறது...

நீ தொலைவிலாவது
வருகிறாயா என்று...

கடற்கரையில் கொஞ்சி கொஞ்சி
நீ பேசும் போதெல்லாம்...

உன் கன்னம் கடிக்க
ஆசைகள் வந்து வந்து செல்லும்...

உன் கரம்
தொட்டாலே சிணுங்குகிறாய்...

நன் எப்படி
உன் கன்னம் கடிக்க...

இன்று எப்படியும் உன்
கன்னம் கடிக்க வேண்டும்...

நாளை எப்படியும்
உன் கன்னம் கடிக்க வேண்டும்...

நீ வருவதற்குள் எத்தனை
எத்தனை ஆசைகள்...

அருகில் நீ வந்துவிட்டாலே
எல்லாம் மறக்கின்றேன்...

என்ன யோசனை மனதில் என்று
நீ கேட்கும் போதெல்லாம்...

அலைகளை ரசித்தேன்
உன் நினைவுகளையும் ராசித்தேன்...

தினம் தினம் உனக்கு
பதில் இது மட்டுமே...

என் உறவே...

நீயாக கொடுக்கும் முதல்
முத்தத்திற்காக காத்திருக்கிறேன்...

அந்த பொக்கிஷநாளை
எதிர்நோக்கி நான்.....
 

வர்த்தக‌ விளம்பரங்கள்