Paristamil Navigation Paristamil advert login

யூரோ கிண்ணம் 2024 - முதல் போட்டியிலேயே கோல் மழை பொழிந்த ஜெர்மனி

யூரோ கிண்ணம் 2024 - முதல் போட்டியிலேயே கோல் மழை பொழிந்த ஜெர்மனி

15 ஆனி 2024 சனி 07:38 | பார்வைகள் : 1144


யூரோ கால்பந்து கிண்ணத் தொடரில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக 5-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அபார வெற்றி பெற்றது.

ஜெர்மனியில் யூரோ கால்பந்து தொடர் தொடங்கியுள்ளது. அல்லியன்ஸ் அரேனா மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் ஜேர்மனி மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின.

ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே ஜேர்மனி அணி கோல் வேட்டையைத் தொடங்கியது. 

ஃபிளோரியன் விர்ட்ஸ் முதல் கோல் அடித்தார்.

அடுத்த 9 நிமிடங்களில் இளம் வீரர் ஜமல் முசியாலா (Jamal Musiala) அபாரமாக கோல் அடித்தார். முதல் பாதியின் 45+1வது நிமிடத்தில் கை ஹவேர்ட்ஸ் பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்க, ஜேர்மனி அணி 3-0 என முன்னிலை வகித்தது. 

இரண்டாம் பாதியிலும் ஸ்கொட்லாந்து அணி கோல் அடிக்க போராடியது. ஆனால் ஜேர்மனியின் நிக்லஸ் ஃபுல்கிரக் 68வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

87வது நிமிடத்தில் அன்டோனியோ ரூடிகேர் சுயகோல் அடித்ததால், ஸ்கொட்லாந்து அணிக்கு கோல் கிடைத்தது. ஆட்டத்தின் 90+3வது நிமிடத்தில் எம்ரே கேன் கோல் அடிக்க, ஜேர்மனி அணி 5-1 என்ற கோல் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்றது.    

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்