Paristamil Navigation Paristamil advert login

மட்டக்களப்பில் மனைவியை கொலை செய்த கணவனுக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பில் மனைவியை கொலை செய்த கணவனுக்கு நேர்ந்த கதி

27 ஆவணி 2023 ஞாயிறு 07:11 | பார்வைகள் : 8130


மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த புதன்கிழமை  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி வந்தாறுமூலையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 74 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவர் சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த நபரான 74 வயதுடைய வீரக்குட்டி தவராசாவின் உடல் பிரேத பரிசோதனையின் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்