Paristamil Navigation Paristamil advert login

விஜய் சேதுபதியின் 50வது படம் தந்த திருப்பம்

விஜய் சேதுபதியின் 50வது படம் தந்த திருப்பம்

15 ஆனி 2024 சனி 15:42 | பார்வைகள் : 469


தமிழ்த் திரையுலகத்தில் குறுகிய காலத்தில் திறமையான நடிகர் என்ற பெயரை பெற்றவர் விஜய் சேதுபதி. ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் பிஸியான கதாநாயகனாக இருந்த போதே 'பேட்ட, மாஸ்டர், விக்ரம்' ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். வயதான கதாபாத்திரங்களிலும் நடித்து தான் ஒரு வித்தியாசமான நடிகர் என்ற பெயரைப் பெற்றார்.

'96' படத்திற்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்கள் அவருக்கு வெற்றியைத் தரவில்லை. அவருக்குரிய பாராட்டுக்களும் கிடைக்கவில்லை. அவற்றை நேற்று வெளிவந்த விஜய்சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' படம் போக்கியிருக்கிறது. விமர்சனங்களும், ரசிகர்களின் வரவேற்பும் படத்திற்கு நன்றாகவே கிடைத்து வருகிறது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகி உள்ள இப்படம் தெலுங்கிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 50வது படம் என்பது எந்த ஒரு கதாநாயகனுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. விஜய் சேதுபதியைப் பொறுத்தவரையில் அது திருப்பத்தைத் தந்த ஒரு படமாகவும் அமைந்துவிட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்