ஸ்பெயின் மகளிர் பயிற்சியாளர் அணி ராஜினாமா
27 ஆவணி 2023 ஞாயிறு 08:13 | பார்வைகள் : 3559
ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணி வீராங்கனை ஒருவருக்கு கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் முத்தமிட்ட விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்து மகளிர் பயிற்சியாளர் அணி ராஜினாமா செய்துள்ளது.
மகளிர் கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்த ஸ்பெயின் அணி தற்போது கொண்ட்டாட்டங்களை தவிர்த்து போராட்டத்தில் களமிறங்கியுள்ளது.
உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்ற பின், ஸ்பானிஷ் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் நட்சத்திர வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவின் உதட்டில் முத்தமிட்டார்.
இது தமது ஒப்புதலுடன் நடந்ததல்ல என குற்றஞ்சாட்டிய ஜென்னி ஹெர்மோசோ, சங்க தலைவர் மீது நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் பதவி விலக வேண்டும் எனவும் பரவலாக வலியுறுத்தப்பட்டது.
ஆனால் தாம் கண்டிப்பாக பதவி விலகப் போவதில்லை என லூயிஸ் ரூபியேல்ஸ் உறுதிபட தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணிக்கும் அவர்களின் கால்பந்து சங்கத்திற்கும் இடையேயான மோதல் போக்கு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
அதாவது மகளிர் கால்பந்து பயிற்சியாளர் அணி மொத்தமாக ராஜினாமா செய்துள்ளது.
அத்துடன் கால்பந்து சங்கத்தின் தலைவராக லூயிஸ் ரூபியேல்ஸ் நீடிக்கும் வரையில், தங்களால் தொடர முடியாது எனவும், தங்களின் ஆதரவை ஜென்னி ஹெர்மோசோவுக்கு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, அனைத்து கால்பந்து நடவடிக்கைகளிலிருந்தும் 90 நாட்களுக்கு ரூபியால்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஃபிஃபா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.