23 நொடிகளில் கோல் அடித்த வீரர்! யூரோ கிண்ணத்தில் அரிய சாதனை
16 ஆனி 2024 ஞாயிறு 10:10 | பார்வைகள் : 1151
யூரோ 2024 கால்பந்து போட்டியில் அல்பேனிய வீரர் நெடிம் பஜ்ரமி, 23 நொடிகளில் கோல் அடித்து சாதனை படைத்தார்.
ஜேர்மனியின் Signal Iduna Park மைதானத்தில் நடந்த யூரோ 2024 போட்டியில் இத்தாலி மற்றும் அல்பேனியா அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய 23வது நொடியில் அல்பேனிய வீரர் நெடிம் பஜ்ரமி (Nedim Bajrami) அபாரமாக கோல் அடித்தார். இத்தாலியின் பெடெரிகோ டிமார்க்கோ தன் சக அணி வீரருக்கு பந்தை பாஸ் செய்ய முயற்சித்தபோது, குறுக்கே புகுந்த பஜ்ரமி கோலாக மாற்றினார்.
இதன்மூலம் யூரோ கால்பந்து தொடரில் அதிவேகமாக கோல் அடித்த முதல் வீரர் என்ற அரிய சாதனையை அவர் படைத்தார்.
அதன் பின்னர் இத்தாலியின் பஸ்டோனி 11வது நிமிடத்திலும், நிக்கோலோ பரெல்லா 16வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இதன்மூலம் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அல்பேனியா அணியை வீழ்த்தியது.
Rhein Energie Stadionயில் நடந்த மற்றொரு போட்டியில், ஸ்விட்சர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஹங்கேரி அணியை வென்றது.