Paristamil Navigation Paristamil advert login

இடதுசாரிகளின் கூட்மைப்பு நாட்டிற்கு ஆபத்து - மரின் லூப்பன்!!

இடதுசாரிகளின் கூட்மைப்பு நாட்டிற்கு ஆபத்து - மரின் லூப்பன்!!

16 ஆனி 2024 ஞாயிறு 11:01 | பார்வைகள் : 3072


புதிய இடதுசாரிகளின் கூட்மைப்பான Nouveau Front populaire இனை மிகவும் மோசமாக மரின் லூப்பன் பாராளுமன்றத்தில் சாடி உள்ளார்.

«இது முன்னாள் இடதுசாரி அமைப்பான NUPES இனை விட மிகவும் ஆபத்தானது. இல்லாமிய இடதுசாரி வாதம் நாட்டின் அத்தைன தகமைகளையும் சுதங்திரத்தினையும் தகர்த்துவிடும். இது வெளிப்படையான உண்மை»

«சார்க்கோசியின் LR கட்சியின் எரிக் கோட்டி எங்களது RN உடன் இணைய விரும்புகின்றார் என்று கூறியமை எறும்புப் புற்றில் காலால் உதைப்பதற்கு ஒப்பானது. அவர்களின் அதிகாரப் போட்டியால் அவர்களின் கட்சியில் சீழ் பிடிக்கப்போகின்றது»

«40 ஆண்டுகள் நாட்டைக் குட்டிச்சுவராக்கியிருக்கும் இவர்களின் கோட்டைகள் தகர்க்கப்படும். நாம் வரலாற்றின்  முக்கிய தருணத்தில் உள்ளாம்»

என மரின் லூப்பன் பாராளுமன்றத்தில் முழக்கி உள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்