அமெரிக்காவில் நூலிழையில் தப்பிய பயணிகள் விமானம்
16 ஆனி 2024 ஞாயிறு 11:26 | பார்வைகள் : 2802
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் ஹொனலுலுவில் இருந்து லிஹூ பகுதிக்கு புறப்பட்ட Southwest ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பெரும் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மோசமான வானிலை காரணமாக தரையிறங்கும் நடவடிக்கைகள் வலுக்கட்டாயமாக கைவிடப்பட்ட நிலையில், சில நொடிகளுக்குள் அந்த விமானம் பல நூறு அடிகள் கீழிறங்கியதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த சம்பவமானது வழக்கத்தை விடவும் மிக வேகமாக நடந்து என்றும், கடல் மட்டத்தில் இருந்து வெறும் 400 அடிக்கு அந்த விமானம் கீழிறங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சுதாரித்துக்கொண்ட விமானிகள் துரித நடவடிக்கையால் விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
மட்டுமின்றி பேரழிவில் இருந்து விமானத்தை மீட்டு, மேலெழுப்பியுள்ளனர்.
அமெரிக்காவின் FAA அமைப்பால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், குறுகிய பயண தூரம் என்பதால் அதிக அனுபவமற்ற முதல் அதிகாரியிடம் விமானம் அப்போது கட்டுப்பாட்டில் இருந்தது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசமான வானிலையால் தரையிறங்குவது கடினம் என உறுதியான நிலையில், முதன்மை விமானி கட்டுப்பாட்டை தம்மிடம் கொண்டுவந்துள்ளார்.
ஆனால் இதே வேளை முதல் அதிகாரியின் சிறு தவறால் விமானம் சட்டென்று கீழிறங்கியுள்ளது.
சுதாரித்துக்கொண்ட விமானி துரிதமாக செயல்பட்டு, விமானத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதுடன், பத்திரமாக மேலெழுப்பியுள்ளார். இதனால் பெரும் விபத்தில் இருந்து Southwest ஏர்லைன்ஸ் விமானம் நூலிழையில் தப்பியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.