80 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்த 23 வயது இளம்பெண்...

16 ஆனி 2024 ஞாயிறு 12:24 | பார்வைகள் : 3389
சீனாவில் 23 வயது இளம்பெண்ணொருவர் 80 வயது முதியவரை திருமணம் செய்த விடயம் பரவலாக பேசப்படுகிறது.
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்தவர் லீ.
80 வயது முதியவரான இவருடன் அங்கு பணிபுரிந்து வந்த சியாஃபங் (23) என்ற இளம்பெண் பழகி வந்தார்.
நாளடைவில் இருவரும் காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சியாஃபங் தனது வீட்டில் லீயை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.
ஆனால் அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எனினும் முதியவர் மீது கொண்ட அன்பினால் சியாஃபங் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி முதியவர் லீயை அவர் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது வைரலாகி வருகிறது.
எனினும் நெட்டிசன்கள் சிலர், சியாஃபங் நிதி காரணங்களுக்காக லீயை திருமணம் செய்துகொண்டதாக விமர்சித்து வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1