Paristamil Navigation Paristamil advert login

இரண்டுமே நாட்டிற்கு ஆபத்து!!

இரண்டுமே நாட்டிற்கு ஆபத்து!!

16 ஆனி 2024 ஞாயிறு 14:33 | பார்வைகள் : 2932


ஜனநாயக இயக்கத்தின் (Democratic Movement) தலைவரும் எமானுவல் மக்ரோனினஇஆதரவாளருமான பிரோன்சவா பய்ரூ (François Bayrou) எதிர்வரும் 30ம் திகதி ஜுன் மாதமும் 7ம் திகதி ஜுலை மாதமும் நடக்க இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இரு பெரும் ஆபத்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

«இடதுசாரிக் கூட்டணியும், தீவிர வலதுசாரிகளும், இரு பெரும் ஆபத்துக்கள். இடது சாரிக்கூட்டணியை Front populaire என்றே அழைப்பதே பெரும் பிழை»

«பிரான்சை ஆட்சி செய்யத் தகுந்த ஒரு மாற்றம் உருவாக்கப்படல் வேண்டும்»

எனவும் பிரோன்சவா பய்ரூ தெரிவித்துள்ளார்.

தேர்தல் களம் கண்டவுடன் கருத்துத் தெரிவிக்கும் பலர், மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் என்பனவற்றின் போது மட்டும் அமைதியாக இருந்து விடுகின்றார்கள்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்