Paristamil Navigation Paristamil advert login

தென்னாப்பிரிக்காவில் Monkeypox  வைரஸால் பலியாகிய இரண்டாவது நபர்

தென்னாப்பிரிக்காவில் Monkeypox  வைரஸால் பலியாகிய இரண்டாவது நபர்

16 ஆனி 2024 ஞாயிறு 14:57 | பார்வைகள் : 1049


தென்னாப்பிரிக்காவில் mpox என்ற வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மேலும் ஒருவர்  உயிரிழந்தார்.

இந்த வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இருவரும் 37 மற்றும் 38 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

2024 ஆம் ஆண்டில் இதுவரை தென்னாப்பிரிக்காவில் 6 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக இந்த வைரஸ் நோய், மங்கிபொக்ஸ் என அழைக்கப்பட்டது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்