Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில்  பொழுது போக்கு பூங்காவில் துப்பாக்கிச்சூடு! 

அமெரிக்காவில்  பொழுது போக்கு பூங்காவில் துப்பாக்கிச்சூடு! 

16 ஆனி 2024 ஞாயிறு 15:03 | பார்வைகள் : 4755


அமெரிக்காவின் ஒக்லண்ட் கவுண்டியில் டெட்ராய்ட் என்ற பகுதியில் குழந்தைகள் பொழுது போக்கு பூங்காவில்  நடப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்டர் பார்க் என்று அழைக்கப்படும் பூங்காவில் நீர் வீழ்ச்சி, நீர் சறுக்குகள் என குழந்தைகள் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க பல வசதிகள் உள்ளன.

இங்கு விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக அளவில் வருகை தருவது வழக்கமானதாகும்.

இந்நிலையில், இந்த வாட்டர் பார்க்கில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8-வயது சிறுமி உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர். 

இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அருகில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து மறைந்து கொண்டார்.

இதனால், அந்த வீட்டை சுற்றி வளைத்துள்ள போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் 215 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்