Paristamil Navigation Paristamil advert login

தொப்பைக்கு என்ன காரணம் தெரியுமா..?

தொப்பைக்கு என்ன காரணம் தெரியுமா..?

16 ஆனி 2024 ஞாயிறு 15:28 | பார்வைகள் : 1899


உடல் எடையை குறைப்பது எளிதல்ல. ஒருவர் உடல் எடையை குறைக்க தனது உணவுப் பழக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். எண்ணற்ற முயற்சிகளுக்குப் பிறகும், நாம் எதிர்பார்க்கும் முடிவுகளை நாம் பெற முடியாமல் போகலாம். அது ஏன்? எங்கு தவறு நடந்துள்ளது? என்று உங்களுக்குள் கேள்வி எழும்பினால், அதற்கு பதில், உங்கள் மதிய உணவு பழக்கத்தில் உள்ளது.

மதிய நேரத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தாததே எடை குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த கவனக்குறைவு இது உங்கள் டயட் பிளானை சீர்குலைத்து, கலோரி எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும். உங்கள் எடை அதிகரிக்க காரணமாக இருக்க கூடிய 

 மதிய உணவு சீரானதாக இல்லாதது... உங்கள் மதிய உணவில் ப்ரோடீன், கார்போஹைட்ரேட் மற்றும் ஃபைபர் ஆகியவற்றின் சமநிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் ஆற்றல் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க ஆரோக்கியமான மத்திய உணவு அவசியமாகும். உணவு சமச்சீராக இல்லாவிட்டால், உங்களின் கூடுதல் பசியைக் கட்டுப்படுத்த சிப்ஸ் அல்லது வேறு தேவையற்ற ஸ்னாக்ஸ்களை நீங்கள் எடுத்து கொள்வீர்கள். இது இறுதியில் உங்களின் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும் மற்றும் உங்கள் டயட்டையும் சீர்குலைக்கும்.

உணவை தவிர்ப்பது அல்லது மதிய உணவை குறைவாக சாப்பிடுவது: நீங்கள் எடை குறைப்புக்கு முயற்சிக்கிறீர்கள் என்றால், மதிய உணவை தவிர்ப்பதோ அல்லது குறைவாக சாப்பிடுவதோ உங்கள் எடையை குறைக்க உதவாது. இவ்வாறு செய்வதால் பகலில் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். எனவே உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க வேண்டுமென்றால் சத்தான மதிய உணவை சாப்பிடுவது அவசியமாகும்.

 நீங்கள் ஒரு வழக்கத்தை பின்பற்ற வேண்டும்: சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். நீதாமதமாகங்கள் பசியுடன் இருக்கும் போது, உங்கள் மதிய உணவைத்  எடுத்துக் கொள்வது சரியான முறை அல்ல. ஆரோக்கியமற்ற உணவுகளை விரும்புவதைக் காட்டிலும், சரியான நேரத்தில் மதிய உணவை உண்ண வேண்டியதன் அவசியத்தை நீங்கள் புரிந்துகொண்டு, சரியான நேரத்தில் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வெளி உணவுகளை நம்பியிருத்தல்: பலர் மதிய உணவை வீட்டில் இருந்து எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, உணவு விடுதியில் கிடைக்கும் உணவுகளையே சார்ந்துள்ளனர். அவர்கள் சரியான நேரத்தில் அவற்றை சாப்பிட்டாலும், வெளி உணவுகளில் போதுமான ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கியமும் இல்லை.

 பல காண்டிமென்ட்களைச் சேர்ப்பது: உங்கள் உணவோடு சேர்த்து பலவிதமான சாஸ்கள் அல்லது dip-ஸ்களைச் சேர்க்க விரும்புபவராக நீங்கள் இருந்தால், அது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தடையை ஏற்படுத்தும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்