Paristamil Navigation Paristamil advert login

விஜய் சேதுபதி மகன் படத்தின் டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..!

விஜய் சேதுபதி மகன் படத்தின் டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..!

16 ஆனி 2024 ஞாயிறு 15:54 | பார்வைகள் : 3522


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ திரைப்படம் ஒரு பக்கம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகம் ஆகும் ’பீனிக்ஸ்’ என்ற படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

சூர்யா ஹீரோவாக அறிமுகம் ஆகி உள்ள இந்த படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபல ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது. சிறையில் இருக்கும் ஒருவனை போட்டு தள்ள அரசியல் பிரபலம் ஒருவர் அடியாட்களை அனுப்ப அதே சிறையில் இருக்கும் சூர்யா அந்த நபரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என டீசரில் இருந்து தெரிய வருகிறது.

அதிரடி ஆக்சன் காட்சிகளில் துள்ளி விளையாடும் சூர்யாவுக்கு முதல் படமே வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த டீசர் வீடியோ வைரலாகி வருகிறது.