Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியா செல்ல முயன்ற இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது

பிரித்தானியா செல்ல முயன்ற இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது

16 ஆனி 2024 ஞாயிறு 16:39 | பார்வைகள் : 643


போலி கடவுச்சீட்டின் மூலம் பிரித்தானியா சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற பெண் திருகோணமலையில் வசிக்கும் 24 வயதுடையவர்.

விமான நிலைய குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி, குறித்த பெண்ணுக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்லவதற்கு உதவியவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் அனைத்து அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு சேவை கவுண்டருக்கு வந்து பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களை சமர்பித்தார், அங்கு பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படம் அவருடையது அல்ல என்பதை அவதானித்த அதிகாரிகள் அவரை தலைமை குடிவரவு அதிகாரியிடம் அழைத்துச்செல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நடந்த தொழில்நுட்ப சோதனையில், இந்த விமான டிக்கெட் போலியானது என தெரியவந்துள்ளதையடுத்து கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்